இந்தியாவில் நடைப்பெறும் ஐ.பி.எல் போட்டியானது மிகவும் பிரபலம் ஆனது. இப்போட்டியில் உள்நாட்டு மட்டுமல்லாது வெளி நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்வார்கள். வருடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 2 மாதங்கள் நடைபெறும். மிக பெரிய கிரிக்கெட் விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் இத்தொடருக்கு உலக ரசிகர்கள் ஏராளம் எனவும் கூறலாம். மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும். ஆனால் இந்த வருடத்தில் இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அணிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

அதில் ஒரு முக்கிய அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி வழிநடத்தும் இந்த அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அந்த அணியின் முக்கியமான வீரர்தான் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ்.

இவர் சென்னை அணிக்காக 12 வருடங்கள் தொடர்ந்து விளையாடினார். கடந்த வருடம் நடந்த ஏலத்தில் அவர் பெங்களூர் அணிக்கு திரும்பினார். மேலும் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி விலகியதை அடுத்து இவர் புதிய கேப்டனாக நியமிக்க பட்டர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சோகம் ஆயினர்.

தற்போது ஐ.பி.எல் போலவே தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் தொடர் நடைப்பெற உள்ளது. மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்திய ஐ.பி.எல் அணியின் நிர்வாகிகள் வாங்கி உள்ளனர். அந்த வகையில் ஜோஹென்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வாங்கி உள்ளனர். இதில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணிக்கு அவர்தான் கேப்டனாக செயல் படுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.