ஆரம்பிக்கலாங்களா! செஸ்♟️ ஒலிம்பியாட்டிற்கு தயாராகும் சென்னை!

சென்னையின் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது வருகின்ற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இபோட்டியின் தொடக்க விழா வருகின்ற 28ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மிக பழமையாகவும், பெருமையாகவும் பார்க்கப்படுகிறது. இப்போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கலந்து கொள்ள திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை பெருமைப் படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. காண்போரை கண் கவரும் இந்த பாலம் ஆனது பிக்னிக் ஸ்பாட்டாக மாறியுள்ளது. பலரும் இங்கே வந்து செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.

napier-bridge
napier-bridge

செஸ் ஒலிம்பியாட் என்றால் என்ன?
இந்தியாவைப் பொறுத்த வரை முதன்மை விளையாட்டாக பலரால் கருதப்படும் முக்கிய விளையாட்டு கிரிக்கெட். செஸ்ஸை பொருத்த வரை பரிட்சியம் இல்லாத ஒன்று. இப்போது செஸ் ஒலிம்பியாடைப் பற்றி பார்ப்போம். இதன் பெயரிலே விளக்கம் உள்ளது. அனைத்து விளையாட்டுகளும் ஒருங்கிணைந்து விளையாடும் முக்கிய விளையாட்டு ஒலிம்பிக் ஆகும். இதும் அதே போன்றுதான், அதாவது இது செஸ் விளையாட்டிற்கான ஒலிம்பிக் என கூறலாம். பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியானது ரஷ்யாவில் நடைப்பெற இருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வேற நாடுகளுக்கு நடக்கும் உரிமையை கொடுக்கலாம் என செஸ் கமிட்டிக்குழு முடிவு செய்தது. அதன்படி இறுதியாக சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடத்த முடிவு செய்தனர். மொத்தம் 187 நாடுகள் இத்தொடரில் கலந்து கொள்ள உள்ளன.

napier-bridge
napier-bridge

போட்டி விதிமுறைகள்:
இந்த போட்டியானது ‘சுவிஸ் சிஸ்டம்’ என்ற விதிமுறைப் படி நடைப்பெறும். அதாவது முதல் 40 நகர்வுகளுக்கு(move) 90 நிமிடங்களும் எஞ்சிய நகர்வுக்கு 30 நிமிடங்களும் வழங்கப்படும். இதில் நாக் அவுட், அரை இறுதி, இறுதிப் போட்டிகள் எல்லாம் இல்லை. எந்த அணி அதிகப் புள்ளி பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். இந்தியாவில் முதல் முறை நடைபெறுவதால் இந்தியா அணி தொடரை வெல்லும் என மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai-olymbiad-chess
chennai-olymbiad-chess

இந்தியா அணியின் விவரம்:
இந்தியா அணி சார்பாக மொத்தம் 20பேர் கொண்ட குழு விளையாட உள்ளது. அதன் விவரம் இதோ
இந்தியா ஆடவர் அணி – ஏ:
விதித் குஜ்ராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண்.

இந்தியா ஆடவர் அணி – பி:
நிஹால் சரின், டி.குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.

இந்தியா மகளிர் அணி -ஏ:
கோனேரு ஹம்பி, ஹரிகா துரோனாவலி, ஆர். வைஷாலி, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.

இந்தியா மகளிர் அணி -பி:
வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரௌட், திவ்யா தேஷ்முக்.

Spread the Info

Leave a Comment