செஸ்♟️ விளையாட தெரியுமா உங்களுக்கு? அப்போ இந்தாங்க 5 லட்சம்!🤑

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டியின் தொடக்க விழா வரும் 28ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற இருக்கிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மிக பழமையாகவும், பெருமையாகவும் கருதப்படுகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடைப்பெறுகிறது என்பதால் உலகின் பல நாட்டு செஸ் வீரர்கள் சென்னைக்கு வருகைத் தந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இத்தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பு படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் கருப்பு வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

napier-bridge
napier bridge

பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது ரஷ்யாவில் நடைப்பெற இருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வேறு நாட்டில் நடத்தலாம் என செஸ் கமிட்டிக்குழு முடிவு செய்தது. அதன்படி இறுதியாக சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடத்த முடிவு எடுத்தனர். மொத்தம் 187 நாடுகள் இத்தொடரில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இப்போட்டியானது ‘சுவிஸ் சிஸ்டம்’ என்ற விதிமுறைப் படி நடைப்பெற உள்ளது. அனைத்து வீரர்களும் சேர்ந்து அதிகப் புள்ளி பெரும் அணியானது வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். இந்தியாவில் முதல் முறை நடைபெறுவதால் இந்தியா அணி தொடரை வெல்லும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Napier-bridge
napier bridge

சரி 5 லச்சத்திற்கு வருவோம். விளையாட்டு வீரர்கள் மட்டுமில்லாமல் சாதாரண மக்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய உள்ளது. அதாவது செஸ் போட்டிகள் தொடங்கும் அதே அரங்கில் இப்போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தவிர யார் வேண்டுமானாலும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். Curtain Raiser Rapid Rating Chess என கூறப்படும் இந்த சுற்றில் வெளியாட்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த சுற்றில் வெற்றிப்பெறுவோருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

Spread the Info

Leave a Comment