44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நாளை மாமல்லபுரத்தில் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்தொடரின் ஆரம்ப விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இத்தொடரின் தொடக்க விழாவில் நாளை வருகை தர உள்ளார். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. காவலர்கள் பலர் குவித்து அங்கேங்கே கண்காணித்து வருகின்றனர். மிகவும் பழமையாகவும், பெருமையாகவும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் பார்கப்படுகிறது, காரணம் இத்தொடர் ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கருதப்படுகிறது.

இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைப்பெறுகிறது, மேலும் மொத்தமாக 187 நாட்டைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் வீராங்கனைகள் சென்னைக்கு வருகைத் தந்துள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை கௌரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் போர்டுடைப் போல் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியின் சின்னமான ‘செஸ் தம்பி’ சின்னத்தையும் பால் பாக்கெட்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில்இப்போட்டியின் செஸ் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யும் இந்த ஜோதியானது ஜூலை 28ஆம் தேதி அதாவது நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கும் படி திட்டமிடப்பட்டது.

அதன்படி ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தடைந்தது. அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் ஜோதிக்கு உற்சாகமாக வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நடைபெற உள்ள மாமல்லபுரத்துக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று வந்தடைந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்போட்டியின் ஆரம்ப விழா நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைப்பெற இருக்கிறது.
