சீயான் விக்ரம் நடிக்கும் 61ஆவது படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் மற்றும் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் விக்ரம், இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ், நடிகர் சிவக்குமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே திரைக்கு வரவிருக்கும் விக்ரமின் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படம் சினிமா ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையில் விக்ரமின் அடுத்த படம் கூடியே விரைவில் தொடங்க உள்ள நிலையில் சீயான் 61 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் பின் செய்தியாளரை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித் நீண்ட நாட்களுக்கு பிறகு ஞானவேல் ராஜாவுடன் மீண்டும் படம் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் விக்ரம் அற்புதமானவர் அவரோடு இணைந்து வேலை செய்ய பிரமிப்பாக உள்ளது.

மேலும் டிஜிட்டல் மீடியா மிகவும் பிரபலமாக உள்ளது இந்த படத்தின் ரீச் அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ், சர்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த பா.ரஞ்சித்தின் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
