காமன்வெல்த் – கிரிக்கெட், ஹாக்கி🏑 இன்று தொடக்கம்!

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இப்போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகள் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்த வருடம் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளுக்கும் மேல் சேர்ந்த 5000திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய அணியின் சார்பாக 215 வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

manpreet-singh-pv-sindhu
Manpreet Singh – P.V. Sindhu

இந்தியாவின் ஈட்டி எறிதலின் நாயகன் நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் தான் பங்கேற்க போவதில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார். குத்துச் சண்டை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற பிரிவுகளில் இந்தியா அணி விளையாட உள்ளது. இதன் தொடக்க விழாவில் ஒலிம்பிக் போட்டியில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேசிய கோடியை ஏந்தி சென்றனர். இந்நிலையில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோத உள்ளன.

indian-cricket

இன்று நடைபெறும் முதல் T-20 லீக் ஆட்டத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களம் இறங்க உள்ள இப்போட்டி இந்தியா நேரப்படி 3.30க்கு தொடங்குகிறது. காமன்வெல்த்தில் முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. அதே போல் பெண்களுக்கான ஹாக்கி போட்டி இன்று மாலை 6.30க்கு தொடங்குகிறது. தனது முதல் லீக் போட்டியில் கானா அணியை எதிகொள்கிறது.

Spread the Info

Leave a Comment