காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 29ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இப்போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்போட்டியில் இந்த வருடம் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகளும் சேர்க்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 70 நாடுகளுக்கும் மேல் சேர்ந்த 5000திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இந்திய அணியின் சார்பாக 215 வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். குத்துச் சண்டை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகளின் பிரிவுகளில் இந்தியா அணி கலந்து கொண்டது. மொத்தமாக 11நாட்கள் இப்போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடைசி நாளான இன்று பேட்மின்டன், ஹாக்கி , ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகள் நடைபெற உள்ளது. பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2வது இடத்திலும் , கனடா 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியா அணி 5வது இடத்தில் உள்ளது.

மேலும் இன்றுடன் போட்டிகள் முடிவடையும் நிலையில் 4வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 18 தங்கம், 15 வெள்ளி, 22வெண்கலம் என மொத்தமாக 55 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
