காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் ஒலிம்பிக் விளையாட்டிக்கு பிறகு மிகவும் பிரபலமான இப்போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகள் நடைபெறுகிறது. மேலும் இந்த வருடம் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் T-20 போட்டியில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தனர். இதில் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறி உள்ளன. நேற்றைய நடைபெற்ற தனது இறுதி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணியானது வீழ்த்தியது. இதன் மூலம் அரை இறுதி போட்டிகள் உறுதியாகியது. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. பிறகு நடக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர் கொள்கிறது. அதே போல ஹாக்கி மகளிர் அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

அரை இறுதியில் சரி சமமான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றது. இன்று இரவு சரியாக இந்தியா நேரப்படி 10.30 தொடங்க உள்ளது. இரு அணிகளும் பலம்வாய்ந்ததாக இருப்பதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளில் அரை இறுதியில் இந்திய அணிகள் வெற்றி பெற்றால் பதக்கங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி விடும். எனவே இந்த இரு போட்டிகளுக்கு இந்தியா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளன.
