தமிழ் சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அவருடைய 43வது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது தந்தையான இளையராஜா வாழ்த்து தெரிவித்து ஒரு சுவாரசியமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “ஒரு காலக்கட்டத்தில் ஆழியாறு டேம் சென்று கம்போஸ் செய்வது பழக்கமாக இருந்தது. அந்த காலத்தில் பல படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட் ஹவுஸில் தங்கி நான்கைந்து படங்களுக்கு கம்போஸ் செய்வோம். அந்த மாதிரி ஒரு கம்போஸிங்கிற்கு இயக்குனர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கேஆர்ஜி என்னை அழைத்துச் சென்று இருந்தனர்.

அப்போது தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு கோவையில் வீடு இல்லாதால் அவர் அடிக்கடி வீட்டிற்கு செல்வர். அப்போது மாலை நேரத்தில் வந்து என்னுடைய மனைவிக்கு பிரசவம் நடந்து உள்ளது மற்றும் மகன் பிறந்துள்ளதாக அவர் கூறினார். அப்போது கூட நான் கம்போஸ்ஸிங் தான் செய்து கொண்டு இருக்கேனென தவிர என் மனைவியை பார்த்து கொள்ள முடியவில்லை.

மேலும் ஏன் மனைவியும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அப்போது நான் ‘ஜானி’ படத்தில் உள்ள ‘செனோரிட்ட ஐ லவ் யூ’ பாட்டிற்கு கம்போஸ் செய்து கொண்டு இருந்தேன். அப்போதுதான் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தார். யுவன் ஹாப்பி பர்த்டே யுவன்” என கூறியுள்ளார்.
Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l
— Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022