சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் தலைவரானா சோனியா காந்தி அவர்களின் தாயார் போவ்லா மைனோ இத்தாலியில் காலமானார்.

இவர் சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் அவர் காலமானார்.

90 வயது ஆகும் போவ்லா மைனோ கடந்த வாரம் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து கடந்த 23ஆம் இத்தாலிக்கு புறப்பட்டு சென்றனர்.

sonia-gandhi
Sonia Gandhi With Rahul Gandhi

இந்நிலையில் அவரது தாயார் கடந்த 27ஆம் தேதி இறந்ததாக கட்சி இத்தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று அவரது இறுதி சடங்குகள் நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Spread the Info

Leave a Comment