Instagram ஒரு புது முயற்சியில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அம்சமானது மிகவும் வேடிக்கையாகவும் எளிதாகவும் உருவாக்கும்படி உள்ளது. இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த சீனாவின் ‘tik tok’ஐ இந்தியா அரசாங்கம் தடை செய்தது. இதனால் இன்ஸ்டாகிராம் செயலி ரீல்ஸ் அம்சத்தை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டது. ரீல்ஸை தொடங்குவதற்கு முன்னால் உங்களுக்கு பிடித்த கிளிப்பைத் தேர்ந்தெடுத்து, மூன்று புள்ளி மெனுவைத் தட்டி, “Remix this reel” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் ரியல் டைம் அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட(pre recorded) காட்சிகளைப் பதிவேற்ற வேண்டும். அசல் வீடியோவின் குரலை(volume) கட்டுப்படுத்தவும், குரல்வழியைச்(voice over)ஐ சேர்க்கவும், புதிய திருத்தங்களைச்(edits) செய்யலாம். இது நார்மலாக பயன்படுத்தும் ரீல்ஸ் ஆகும்.

ஆனால் இப்போது சொல்லப்பட்டுள்ள புது அம்சத்தின் படி இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படங்களை சேர்த்து அதற்கு பின்னணியில் voice over செய்து ரீல்ஸாக பதிவிட முடியும். தற்போது உள்ள அம்சத்தில் ரீல்ஸில் வீடியோக்களை மட்டுமே storyயில் பதிவிட முடியும். புது அம்சத்தின் படி நம்மிடம் உள்ள போட்டோக்களை ஒன்றாக சேர்த்து ரீல்ஸாக வெளியிடலாம். மேலும் இந்த அம்சத்தில் வித்யாசமான பல டெம்ப்ளட்ஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செயல்முறை ஆனது testingல் உள்ளது. இந்த சிறப்பம்சம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த அம்சத்தை ரீலிஸ் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளனர்
