இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளுக்கான தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டத்தின் முதலில் இருந்ததே மழை குறுக்கிட்டு கொண்டே இருந்தது, இதனால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பிறகும் மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 40ஆக குறைக்கப்பட்டது. பின்பு இந்தியா அணி இறங்கியது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு முனையில் நிலைத்து நின்று ஆடிய ஷுப்மன் கில் 98 ரன்கள் எடுத்திருந்தார்.

மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக் வர்த் லூயிஸ் முறை கைபிடிக்கப்பட்டது. இதனால் 36 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்பு களம் இறங்கிய வெஸ்டிண்டிஸ் அணி ரன்கள் குவிக்க திணறியது. இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக வெஸ்டிண்டிஸ்ஸின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் மற்றும் ப்ரோடான் கிங் தலா 42 ரன்கள் எடுத்து தந்து விக்கெட்களை பறி கொடுத்தனர். இறுதியாக அந்த அணி 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் இந்தியா அணி டக் வர்த் லூயிஸ் முறைபடி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்ர சாஹல் 4 விக்கெட்களை கைப்பற்றினர். இதனால் மூன்றாம் போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்று வெஸ்டிண்டிஸ் அணியை வெள்ளையடித்து தொடரை வென்றது. சிறப்பாக விளையாடி 98 ரன்கள் குவித்த ஷுப்மன் கில் ஆட்ட நாயகன் மட்டுமல்லாமல் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
