இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி ஜாம்பவான் வீரர்களில் ஒருவராவார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை சென்னை அணி விளையாடிய அத்தனைப் போட்டிகளிலும் எம்.எஸ்.தோனி தலைமை தாங்கி இருக்கிறார்.

கடந்த சீசனில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் மற்றும் சென்னை அணியின் சக வீரரான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அவர் தலைமை ஏற்று நடந்த போட்டிகள் பெருமபாலும் தோல்வியிலே முடிந்ததால் மீண்டும் எம்.எஸ்.தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

நடுவில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சென்னை நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவர் அடுத்த சீசனில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியானது. அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? மேலும் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் மற்றும் அவரே கேப்டனாக செயல்படுவார் என கூறியுள்ளார். இந்த செய்தியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.