தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆலோசனை நடந்தது. இதைத் தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மாநிலத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த காணொளியில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், டி.ஐ.ஜி.க்கள், கமிஷனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள், போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை. இதன் மூலம் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என கூறினார். இதைத் தொடர்ந்து தமிழகதில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போதை பொருள் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.