வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தனுஷ்! – தி க்ரே மேன்!

பிரபல தமிழ் நடிகரான தனுஷ் தனது நடிப்பின் மூலம் ஹாலிவுட்டில் தன் கால் தடத்தைப் பதித்து உள்ளார். ஹாலிவுட்டில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் ‘தி கிரே மேன்’. இந்நிறுவனம் ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் பலவற்றை இயக்கி உள்ளது. ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’, ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’, ‘கேப்டன் அமெரிக்கா’ போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து உள்ளது. அந்த வரிசையில் இந்த ‘தி கிரே மேன்’ படம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வெளிவரவுள்ளது.

dhanush-grayman
dhanush-grayman

ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் சீரியஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா சீரியஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கிறிஸ் இவன்ஸ் மற்றும் ரயன் கோஸ்லிங் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவவேற்பைப் பெற்றது. தனுஷ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களும் கொண்டாடினர். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் இப்படத்தின் பிரீமியர் ஷோ வெளியிடப்பது. இதில் நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் பாரம்பரிய உடையன வேட்டி சட்டையில் கலந்து கொண்டார்.

dhanush-russo-brothers
dhanush-russo-brothers

நடிகர் தனுஷ் தனது மகன்களோடு இருக்கும் புகைப்படம் மற்றும் ரூஸ்ஸோ சகோதரர்கள் உடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Welcome to India Russo brothers” என பகிர்ந்து உள்ளார். தனுஷ் முதல் முறையாக ஹாலிவுட்டில் நடிக்கும் இப்படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பைத் தூண்டி உள்ளது.

Spread the Info

Leave a Comment