தனுஷ் நடித்து வெளியாக உள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது. வெங்கி அல்த்தூரி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். தனுஷ், சம்யுக்த மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தில் ஸ்டுடென்ட் மற்றும் ப்ரோபஸ்ஸர் என இரு வேடங்களில் வரும் நடிகர் தனுஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி உள்ளார். படிப்பை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப் படுத்தது என டீசரில் தெரிகிறது.

‘படிப்பு பிரசாதம் மாதிரி புடுங்கு, 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி விக்காதிங்க’ என்ற டயலாக் வைரலாகி வருகிறது. தனுஷ் பிறந்தநாள் அன்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘தி கிரே மேன்’ படத்தில் காட்சிகளில் தனுஷ் மிரட்டி இருந்தார். மேலும் படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய செய்தியை ரூஸ்ஸோ பிரதெரஸ் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் வாத்தி படத்தின் டீஸர் வெளியானதால் தனுஷின் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.