“முற்பகல் செய்யும், பிற்பகல் விளையும்” – சத்தமே இல்லாமல் வெளியான ‘பகாசுரன்’ டீஸர்!😄

இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பகாசுரன்’. இப்படத்தில் செல்வராகவனோடு சேர்ந்து நட்டி நாகராஜ், ராதா ரவி, மன்சூர் அலி கான் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். மேலும் மோகன்.ஜி அவர்களே எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார்.

selvaraghavan
Selvaraghavan

இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. செல்போன்களால் இந்த இளைஞர் சமுதாயம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் போல் இந்த படத்தின் கதை அமைந்து உள்ளது. வித்யாசமான தோற்றத்தில் செல்வராகவன் மற்றும் போலீஸ் ஆபீஸராக நட்டி நட்ராஜ் நடித்து உள்ளனர்.

natty-natraj
Natty Natraj

இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் ‘பீஸ்ட்’ மற்றும் ‘சாணி காகிதம் ‘ ஆகிய படங்களைத் தொடர்ந்து பகாசுரன் படத்தில் நடித்து வருகிறார். ‘சாணி காகிதம்’ படத்தில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

selvaraghavan
Selvaraghavan

தற்போது நடித்து வெளியாக உள்ள ‘பகாசுரன்’ படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இதோ டீஸர்👇

YouTube Embed Code Credits: MRT Music
Spread the Info

Leave a Comment