தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ‘பாரதி ராஜா’. ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனார். சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் பாரதி ராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பிறகு உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை என வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்தார். இதனால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் நலம் விசாரித்து விரைவில் குணம் அடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து இருந்தனர். பிறகு அறிக்கை ஒன்றில் ரசிகர்கள் மற்றும் பிறர் யாரும் தன்னை காண வர வேண்டாம் என கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர பிரிவில் இருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்ற பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பூரண குணமடைந்து ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.