வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வட சென்னை’. தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், இயக்குனர் அமீர் மற்றும் பலர் நடித்த இப்படமானது அமோக வெற்றி பெற்றது. gangster கதையை மையமாக கொண்ட இப்படமானது அந்த வருடத்தின் சிறந்த படமாக பேசப்பட்டது. வெற்றிமாறனின் ஆக்ரோஷமான கதை சந்தோஷ் நாராயணனின் BGM என பட்டையை கிளப்பியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அன்புவின் எழுச்சி என படம் முடிவில் சொல்லப்பட்டது. இரண்டாம் பக்கம் உருவாக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.

மேலும் வெற்றி மாறன் அதற்கு பிறகு தனுஷை வைத்து ‘அசுரன்’ படத்தை இயக்கினார். வெற்றி மாறன் தனுஷ் காம்போ சொல்லவா வேணும். அதும் வழக்கம் போல் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இது வரை ‘பொல்லாதவன்’,’ஆடுகளம்’ , ‘வட சென்னை’ மற்றும் ‘அசுரன்’ என எடுத்த அனைத்து படங்களும் அமோக வெற்றிபெற்றது. பிளாக் பஸ்டர் காம்போ என அழைக்கப்படும் வெற்றிமாறன் தனுஷின் அடுத்த படத்தின் அப்டேட்டை வெற்றி மாறன் கூறியுள்ளார். ‘விடுதலை’, ‘வாடிவாசல்’ என பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விரைவில் வட சென்னை – 2 எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் ஒரு பக்கம் ‘வாத்தி’, ‘திருச்சிற்றம்பலம்’ என அவர் பிஸியாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘வாத்தி’ படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தனுஷ், அனிருத் ரவிச்சந்தர், நித்ய மேனன், ராஷி கண்ணா ஆகியோர் கலந்து கொண்ட திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து வெற்றி மாறனின் இந்த அப்டேட் ஆனது தனுஷ் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.