சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைப்பெற்ற வந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இனிதே நிறைவு பெற்றது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் கிட்டத்தட்ட 187 நாடுகளைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா மிகவும் கோலாகலமாக தொடங்கி பல கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இப்போட்டியிலன் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மெய்ய நாதன், செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் செஸ் கமிட்டி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஜிம்னாஸ்டிக், கபடி, பரதநாட்டியம் மற்றும் அந்தரத்தில் பறந்துகொண்டே பியானோ வாசித்த கலைஞர் என பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவின் சுதந்திர விழாவை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது, எப்படி வெள்ளையர்கள் வந்தனர் என்பதை நாடக வடிவில் வடிவமைத்து இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப விழா மற்றும் நிறைவு விழாவைச் சேர்ந்த கலை நிகழ்ச்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சுதந்திர நாள் சம்பந்தமான நாடகத்திற்கு உலக நாயகன் கமலஹாசன் பின் குரல் கொடுத்து இருந்தார். அவரின் அந்த குரல் மிக பிரமாண்டமாகவும் அரங்கையே அதிரவைப்பதாகவும் இருந்தது.

அதை குறித்த வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தி பகிர்ந்து உள்ளார். அதில் கமலஹாசன் அந்த நாடகத்திற்கு டப்பிங் செய்வது போல் உள்ளது. இந்த வைரல் விடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.