நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் கல்யாணம் ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது. சென்னையின் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த கல்யாண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருகான், இயக்குனர் மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை பிரபல ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் நடத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். இந்த நிகழ்ச்சியில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கடுமையாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ஓ.டி.டி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வைரலானது. இந்நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவரை ஒருவர் புகழ்ந்து உள்ளனர். “நான் வேலையை மட்டுமே நம்புவேன், எங்களை சுற்றி காதல் எப்போவுமே இருந்து கொண்டு இருக்கும்” என நயன்தாரா கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் “ஒரு பெண்ணாக அவரது கேரக்டர் என்னை மிகவும் ஈர்த்தது மேலும் உள்ளே, வெளியே அழகானவர்” என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ👇