தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் தற்போது நிலவி வருகிறது. இதைக் குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் கூறியதாவது “தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டைக்கு இடையிலான 136 கிலோ மீட்டர் பாதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 11 வருடங்களில் 1036 பேர் இறந்து உள்ளனர். இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், இரவு நேரங்களில் சரியான ஒளிரும் விளக்குகள் இல்லாததால் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த சாலையும் ஒன்று. மேலும் 8 இடங்களிலும் இரு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அடிக்கடி கோரிக்கை விடுத்தும் கூட நடவடிக்கை எடுக்காமல் உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது.

எனவே 8 வழிச்சாலையை 4 வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புகள் குறைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.