இந்தியா நாட்டின் 15வது ஜனாதிபதி தேர்தல் கடந்த 18ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைப்பெற்றது. தேர்தல் வேட்பாளர்களாக பாஜக சார்பாக திரௌபதி முர்முவும் எதிர்கட்சியின் வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹவும் போட்டியிட்டனர். மேலும் நடந்த இத்தேர்தலில் 99% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. தேர்தல் கணிப்புகள் அனைத்து முடிவுகளும் திரௌபதி முர்முவுக்கு சாதகமாகவே இருந்தது. இதுதேர்தலில் 64% வாக்குகள் பெற்று திரௌபதி முர்மு அபார வெற்றிப்பெற்றார்.

தற்போதைய ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலமானது நேற்றுடன் முடிவு அடைந்தது. இன்று நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவி ஏற்றார். இந்தியாவின் முதல் பழங்குகுடியை சேர்ந்த பெண் இவர் என்பது குறிபிடத்தக்கது. இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பதவியேற்புக்கு முன், மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு முதலில் மரியாதை செலுத்திய பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துருக்கும் ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார். பாராளுமன்ற மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.

அவருக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து திரவுபதி முர்மு பதவியேற்ற பின் தொடர்ந்து உரையாற்றினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முப்படை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.