எப்போது அப்பாவுடன் நடிப்பிங்க? – துல்கர் சொன்ன பதிலை பாருங்கள்!😃

மலையாள திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் பிரபலம் ஆனவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர் தமிழ்த் திரையுலகில் முதல் முதலாக இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ மூலம் அறிமுகம் ஆனார். துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த இப்படம் நல்ல வரவேப்பைப் பெற்றது. பிறகு 2020ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் அமோக வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் திரையுலகில் தனி அங்கீகாரம் பெற்றார், மேலும் ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்தது.

dulquer-salmaan
Dulquer Salmaan

இவர் தற்போது நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ‘சீதா ராமம்’. துல்கர் சல்மான், ருனால் தாக்குர், ராஷ்மிக மந்தனா மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேடையில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்லான படம், மேலும் மதன் கார்கி இப்படத்தை தமிழில் டயலாக்குகளை மொழி பெயர்த்துள்ளார். நான் தான் இந்த படத்திற்கு தமிழிலும் டப்பிங் செய்துள்ளேன். இந்த படமானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர்👇

YouTube Video Embed Code Credits: Lyca Productions

மேலும் நிறைய காதல் கதைகளில் நடித்து சோர்வாகி விட்டேன், இனி காதல் சம்பந்தமான கதைகளில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தார். மேலும் “அப்பாவுடன் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது. நான் பலமுறை அவரிடம் இதைப்பற்றி கேட்டுள்ளேன். அப்பா சம்மதித்தால் விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன், மேலும் இதைப்பற்றி அவர்தான் கூற வேண்டும்” என கூறினார்.

mammootty-dulquer
Mammootty Dulquer Salmaan
Spread the Info

Leave a Comment