கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் மற்றும் இலக்கிய விழா கோவையில் நடைபெற்றது. இவ்விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தேனிசை தென்றல் தேவா மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது தேவா கூறியதாவது வைரமுத்துவிற்கு Expiry Date இல்லை காலத்திற்கும் பதில் சொல்லும் வரிகளை எழுதியவர்.

மேலும் எனக்கும் பாடல் வரிகளை எழுதியவர், எனது மகனுக்கும் பாடல் எழுதுகிறார், எனது பேரனுக்கும் பாட்டு எழுத வேண்டும் எனக் கூறினார். தேவா பேசிக் கொண்டிருக்கும் பொழுது துரை முருகன் செய்த முகபாவனையால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது. அதன் பிறகு துரை முருகன் பேச தொடங்குவதற்கு முன் தன் கைக்குட்டையால் மைக்கை துடைத்து காலம் கெட்டு கெடக்கு என பேச ஆரம்பித்தார். இதை கண்டு அரங்கமே சிரிப்பலை ஆனது.

தொடர்ந்து பேசுகையில் வைர முத்து ஏன் உயிர் நண்பர். நன் பேச செல்வதர்க்கு முன் அவரிடம் தான் தலைப்பை வாங்கி கொண்டு செல்வேன். மேலும் கலைஞரோடு நெருக்கமாக இருந்தவர், நேர்மையானவர், நிமிர்ந்து நடப்பவர், தன்னிலை மாறாதவர் என்று இவ்வாறு புகழ்ந்துபேசினார்.