ஊழல் புகார் கூறி என் புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர்! – ஈ.பி.எஸ்

தன் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனி சாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை கோவை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நெடுஞ்சாலை பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

edappadi-k-palaniswami
Edappadi K.Palaniswami

இதனால் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. மேலும் இதை சமூக வலைத்தளங்களில் அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருந்தது. இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் எடப்பாடி பழனி சாமி.

arappor-iyakkam

மேலும் தனக்கு மான நஷ்ட ஈடாக 1 கோடி 10 லட்சம் தர வேண்டும். மேலும் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்ட அறப்போர் கட்டளை மீது தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார். லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டு கூறுவதற்கு முன் அதை உறுதி செய்ய வேண்டும்.

edappadi-k-palaniswami
Edappadi K.Palaniswami

ஆதாரமின்றி இது போன்ற குற்றசாட்டுகளை கூற கூடாது என எடப்பாடி பழனி சாமி தரப்பின் வழக்கறிஞ்சர் வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உள்ளார்.

Spread the Info

Leave a Comment