மின்கட்டண உயர்வு – யூனிட்டுக்கு எவ்வளவு? தலைவர்கள் பலர் கண்டனம்!

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு பற்றிய புதிய அறிவிப்பை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. மேலும் இந்த மின் கட்டண உயர்வானது அடித்தட்டு மக்கள் பாதிக்காத வகையில் இருக்கும் என கூறியுள்ளார். இதன் படி 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் வழக்கம் போல் இலவசம். 2 மாதங்களில் 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 27.50 ரூபாயும், 201 யூனிட்டில் இருந்து 300 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 72.50 ரூபாயும், 301 யூனிட்டில் இருந்து 400 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 147.50 ரூபாயும், 401 யூனிட்டில் இருந்து 500 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 297.50 ரூபாயும் உயர்த்துவதாக கூறப்பட்டுள்ளது.

senthil-balaji
senthil-balaji

2 மாதங்களில் 501 யூனிட்டில் இருந்து 600 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 155 ரூபாயும் உயர்த்துவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 601 யூனிட்டில் இருந்து 700 யூனிட் வரைப் பயன்படுத்துவோருக்கு 275 ரூபாயும் உயர்த்துவதாக கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள விவசாயம், விசைத்தறி மற்றும் முக்கிய வழிபாட்டுத் தளங்களுக்கு தொடர்ந்து இலவசமாக தரப்படும் என கூறி இருந்தார். இந்நிலையில் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தேதிமுக தலைவர் விஜயகாந்த், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அரசின் வசதிக்காக மக்கள்ளை அவதிக்கு உள்ளாக்குவதா? என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

electricity
electricity
Spread the Info

Leave a Comment