பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் கஃபூர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் படப்பிடிப்பு தளமான சித்ரகூட்டில் நடைப்பெற்று வந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி கொண்டது. பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் கருப்பு புகை சுற்றி இருந்த பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த தீ விபத்தானது மர பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெரும் தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 32 வயது உடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் ரன்பீர் கஃபூர், ஷார்த்த கஃபூர் நடித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளரான போனி கஃபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படமானது அடுத்த வருடம் வெளியாக உள்ள நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
