சீயான் விக்ரம் நடித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்’ படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரிடம் வரவேற்பை பெற்ற ரித்து வர்மா நடித்து உள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், திவ்ய தர்ஷினி, ராதிகா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பானது ஏற்கனவே 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் சில காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டன.

பின்னர் சில பிரச்னையால் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது. கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. பிறகு சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா என மூன்று படங்களில் கம்மிட் ஆகினார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் சில படங்களில் நடிக்க போய்விட்டார்.

தற்போது சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். இப்படமானது செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரம் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனால் ‘வெந்து தணிந்தது காடு’ படம் முடிந்த உடன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. படத்தின் சில காட்சிகளை வெளிநாட்டில் ஏற்கனவே எடுத்துள்ள நிலையில் கவுதம் மேனன் விக்ரமின் சந்திப்பு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
