இன்று முதல் பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி உயருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47வது ஜி.எஸ்.டி கவுன்சிலிங் கூட்டம் நடைப்பெற்றது. இதில் உணவுப் பொருட்களின் ஜி.எஸ்.டி உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி உயருகிறது?
இந்த வரி உயர்வானது பேக்கிங்கில் அடைக்கப்படும் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு, பன்னீர், தேன், அடைக்கப்பட்ட மீன், கோதுமை ஆகிய பொருட்களுக்கு அடங்கும். 25 கிலோவில் பேக்கிங் செய்யப்படும் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வெட்டுக்கத்தி, பேப்பர் கத்தி, கரண்டி, பென்சில், ஷார்ப்னர், முள் கரண்டி, ஸ்கிம்மர், கேக் சர்வர்,மை, LED விளக்குகள் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 12%ல் இருந்து 18%ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சலவை இயந்திரம், தரம் பிரிக்கும் இயந்திரம், விதை, தானியங்கள், பருப்பு வகைகள், அரவை இயந்திரம் மற்றும் வெட் கிரைண்டர் போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 5%இல் இருந்து 18%ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 12%ல் இருந்து 18%ஆக வரி உயர்த்தப்படுகிறது. மேலும் வங்கி காசோலைகள் – 18%, வரைபடங்கள், உலக உருண்டைகள் மற்றும் வரைபடம் சார்ந்த பொருட்களுக்கு 12% ஜி.எஸ்.டி. அதிகரித்துள்ளது. மேலும் 1000 ரூபாய் வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 12% வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. 5000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் மருத்துவ அறைகளுக்கு 5% வரியும் உயர்ந்துள்ளது. மருத்துவக்கழிவு சுத்திகரிப்புக்கு 12% வரி, சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாட்டிற்கு 12%ல் இருந்து 18%ஆக உயர்ந்துள்ளது.
எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைகிறது?
பேட்டரி பேக் பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி. வரி குறைந்து உள்ளது. லாரி மற்றும் சரக்கு வண்டிகளின் வாடகை 18%ல் இருந்து 12%ஆக குறைந்து உள்ளது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி இன்று முதல் அமலாகிறது.
