பிரபல இசை அமைப்பாளரும் இசைத் துறையின் ஜாம்பவான் என கருதப்படுபவர் இசைஞானி இளையராஜா. இன்று அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். தமிழ்த்துறை மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்கள் 1000த்திற்கும் மேல் இசை அமைத்தவர் இளையராஜா. கலை, விளையாட்டு, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது. அனைத்து துறைகளிலும் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இசைத்துறையில் இருந்து இளையராஜா தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பொதுவாக அரசியல் சம்மந்தமான விஷயங்களில் பெரிதும் ஈடுபடாதவர் இளையராஜா. ஆனால் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்காருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். அவரது அந்தக் கருத்தை ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர், மேலும் ஒரு சிலர் பாராட்டினார், கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய இந்தக் கருத்தை திரும்ப பெற சிலர் வலியுறுத்தினர். ஆனால் இது என்னுடைய கருத்து மேலும் கருத்தை நான் பின் வாங்கப் போவது இல்லை என கூறினார்.

இதனால்தான் இவர் எம்.பியாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் என சிலர் விமர்சித்தனர். மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் அதைப் பற்றிக் கவலைப்படாத இளையராஜா இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். மேலும் எம்.பியாக பதவி ஏற்ற அவரை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.