பிரபல தயாரிப்பாளர்கள் வீட்டில் அடுத்துடுத்து வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகினறனர். இன்று காலை முதலே தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்டு நடந்து வருவதால் அனைவரும் பீதி அடைந்து உள்ளனர். தமிழ் துறையில் பைனான்சியராக இருப்பவர் அன்புச்செழியன். சென்னையில் இருக்கும் இவரது வீட்டில் வருமான வரி துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல வெற்றி படங்களை தயாரித்துள்ள கலைப்புலி எஸ்.தாணு வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர் காக்க காக்க, சச்சின், துப்பாக்கி, தெறி, கபாலி, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

அவரது அலுவலகத்திலும் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பல தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
