இன்று டிசைடர்! தொடரை வெல்லப் போவது யார்?

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி இன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராஹ் அதிரடியாக விளையாடினர். இதைத் தொடர்ந்து நடைப்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. இரண்டாம் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

indian-team
indian-team

இதனால் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-1 என சம நிலையில் உள்ளது. இன்று நடைப்பெறும் போட்டியில் வெற்றிப் பெரும் அணி தொடரை வெல்லும் என்பதால் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி கடந்த சில தினங்களாக மோசமான பார்மில் உள்ளதால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டி இருக்கும் என ரசிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.

virat-kohli
virat-kohli
Spread the Info

Leave a Comment