இங்கிலாந்தை பந்தாடிய பந்த் !👊 தொடரை வென்றது இந்தியா!💪

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாம் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றனர். தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தீர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அதே ஒவரில் ஜோ ரோடும் டக் அவுட் ஆகி அதிர்ச்சிக் கொடுத்தார்.

indian-team
indian-team

ஆரம்பத்தில் இருந்ததே தடுமாறிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. முடிவில் 45வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 60 ரன்களும், ஜேசன் ராய் 41 ரன்களும் சேர்த்தனர். இந்தியா அணி சார்பாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்களும் , சிராஜ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

pant-pandya

பின்பு களம் இறங்கிய இந்தியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 1 ரன்னில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.பின்னர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி 17 ரன்களில் வெளியேற இந்தியாவின் டாப் ஆர்டர் காலியானது. பின்பு ரிஷாப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா இணை நிதானமாக ஆடி வெற்றிக்கு வழி சேர்த்தனர். இதில் அதிரடியாக ஆடிய பந்த் சதமடித்தார்.

rishab-pant

இதனால் இந்தியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்தியா அணி சார்பாக ரிஷாப் பந்த் 125 ரன்களும் ஹர்திக் பாண்டியா 71 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ரிஷாப் பந்தும் தொடர் நாயகன் விருது ஹர்திக் பந்தியாவும் பெற்றனர்.

india-win-series
indian-team
Spread the Info

Leave a Comment