இந்தியா – வெஸ்டிண்டிஸ் இன்று முதல் ஒரு நாள் போட்டி!

இந்தியா மற்றும் வெஸ்டிண்டிஸ் அணிகளுக்கு எதிரான முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா அணி வெஸ்டிண்டீஸ்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் விளையாட உள்ளது. இத்தொடர் ஜூலை-22 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிய உள்ளது. இந்நிலையில் முதலாம் ஒரு நாள் போட்டி இன்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முக்கிய நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லி, மொஹம்மத் ஷம்மி, புவனேஷ்குமார், கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

indian-team
indian-team

இதனால் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். ஷிகர் தவான் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தீபக் ஹூடா, அக்சார் பட்டேல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷார்துல் தாக்குர், யூஸ்வேந்த்ர சாஹல், ஆவேஸ் கான், முகமத் சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

jadeja-klrahul
jadeja-klrahul

இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் காயம் ஏற்பட்டதால் இன்று முதல் போட்டியில் விளையாடுவது கேள்விக் குறியாகி உள்ளது. ஏற்கனவே கே.எல்.ராகுல் T20ல் இருந்து விலகி உள்ள நிலையில் இன்று ஜடேஜாவும் விளையாடுவது சந்தேகம்தான். முக்கிய வீரர்கள் விலகியுள்ளதால் இது இந்தியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப் படுகிறது.

Spread the Info

Leave a Comment