இந்தியா மற்றும் வெஸ்டிண்டிஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாம் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியா அணி மேற்கு இந்தியா தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் உள்ள இத்தொடர் ஜூலை-22 ஆம் தேதி தொடங்கியது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து இன்றும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

மேலும் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்து தோற்றத்தால் பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு இந்தியா அணி களம் இறங்க உள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
