‘பாய்ஸ் இன்னக்கி வைட் வாஷ் பண்றோம்’ – இன்று 3வது ஒருநாள் போட்டி!

இந்தியா வெஸ்டிண்டிஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி இன்று குயின்ஸ் பார்க்கில் நடைப்பெற உள்ளது. இந்தியா அணி மேற்கு இந்தியா தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது கடந்த வாரம் ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாம் போட்டியில் 2 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பெறச்செய்தார் இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் அக்ஸார் பட்டேல்.

axar-patel
Axar patel

ஷிகர் தவான் தலைமையிலான இந்த தொடர் வெற்றியின் மூலம் தொடரையும் ஏற்கனவே வென்று உள்ளது இந்தியா அணி. இந்நிலையில் இன்று மூன்றாம் ஒரு நாள் போட்டி நடைப்பெற உள்ளது. மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று வைட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா அணி விளையாட உள்ளது. மேலும் கிட்டத்தட்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றியை நூலிழையில் தவறவிட்ட மேற்கு இந்தியா அணி இப்போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெரும் எண்ணத்தில் களம் இறங்க உள்ளது.

Spread the Info

Leave a Comment