இந்தியா வெஸ்டிண்டிஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி நேற்று குயின்ஸ் பார்க்கில் நேற்று நடைப்பெற்றது. இதில் இந்தியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி மறுபடியும் திரில் வெற்றிப்பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் போட்டியின் முதல் போட்டியில் இந்தியா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. தொடர்ந்து நடந்த இரண்டாம் ஒரு நாள் போட்டி நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மான்களாக களம் இறங்கிய ஷாய் ஹோப் மற்றும் காய்ல் மில்ஸ் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் சதமடித்து 115 ரன்களில் வெளியேறினார். அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 115 ரன்கள், கேப்டன் நிக்கோலஸ் பூரான் 74 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா அணி சார்பாக ஷர்த்துல் தாகூர் அதிகபட்சமாக 3 விக்கெட் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து. அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களில் வெளியேறினார். பிறகு ஸுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் மற்றும் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்தனர். பின்பு சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது. பின்பு களம் இறங்கிய அக்சார் படேல் அதிரடி காட்டினார்.

35 பந்துகளை சந்தித்த அக்சார் பட்டேல் 64 ரன்கள் எடுத்தார் இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்கள் அடங்கும். இதனால் இந்தியா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது. ஆட்ட நாயகன் விருதை அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அக்சார் படேல் வாங்கினார்.