இந்தியா மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் T-20 போட்டி நேற்று டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்பு களம் இறங்கிய ஓப்பனிங் பட்ஸ்மான்களாக ரோஹித் சர்மா மற்றும் மிடில் ஆர்டரில் கலக்கி வரும் சூர்யா குமார் யாதவ் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார். அருமையாக தொடங்கிய இந்திய அணியின் சூர்ய குமார் படம் 24 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்ட மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது.

அதற்கு பிறகு களம் இறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பந்துகளை அடித்து துவம்சம் செய்தார். 19 பந்துகளை சந்தித்த அவர் 41 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகள் 2 சிஸ்சர்கள் அடங்கும். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது இந்திய அணி. பின்பு களம் இறங்கிய மேற்கு இந்திய தீவு அணியானது ஆரம்பத்தில் இருந்தே ரன்கள் எடுக்க திணறியது. ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். அணியில் அதிகபட்சமாக சாம்ராத் ப்ரூக்ஸ் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பாக அர்ஸதீப் சிங் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

நீ மட்டும் தான் ஃபர்பாம் பண்ணுவியா நானும் பன்னுவேன்யா என்று தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் பங்கிற்கு 2 விக்கெட்களைச் சாய்த்தார். இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 5 போட்டிகள் கொண்ட இடத்தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
