இந்தியாவிற்கு 20வது தங்கம்🥇 – காமன்வெல்த் புள்ளி பட்டியல்!🔥

காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது 20வது பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் மிகவும் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 11நாட்கள் நடந்த போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி நாளான இன்று பேட்மின்டன், ஹாக்கி , ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகள் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற பேட்மின்டன் இறுதி போட்டியில் இரண்டு தங்க பதக்கங்களை தன் வசமாக்கியது இந்தியா அணி.

pv-sindhu
P.V Sindhu

முதலில் நடைபெற்றால் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கனடா நாட்டைச் சேர்ந்த மிச்செல் லீயை எதிர் கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-15 என தன் வசம் ஆக்கினார். பின்பு அதிரடியாக விளையாடி 21-13 என இரண்டாம் செட்டை கைப்பற்றினர். இதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து தங்கம் வென்றார்

lakshya-sen
Lakshya Sen

பிறகு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங்கை எதிர் கொண்டார். முதல் செட்டை 19-21 என பறிகொடுத்த லக்‌ஷயா அடுத்த செட்டை அதிரடியாக விளையாடி 21-9 என கைப்பற்றினர். பின்பு தங்க பதக்கத்தை தீர்மானிக்க கூடிய கடைசி செட்டை 21-16 என வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு 20வது தங்க பதக்கம் கிடைத்து உள்ளது. மேலும் பதக்க பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Spread the Info

Leave a Comment