விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் கமலஹாசன். மேலும் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியன்-2 என்ன ஆச்சு சார்? என்பது தான் கேள்வி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலஹாசனை வைத்து இந்தியன்-2 இயக்கி கொண்டிருந்தார். நடுவில் படப்பிடிப்பின் பொது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படப்பிடிப்பு தற்காலிகமா நிறுத்தப்பட்டது.

அதற்கு பிறகு கமல் விக்ரம் படத்தில் கவனம் செலுத்தினர். மேலும் ஷங்கர் தெலுங்கு படத்தில் தன் வண்டியை திருப்பி விட்டார். தற்போது தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சாரணை வைத்து படம் இயக்க உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள இப்படத்தை தமன் இசையமைக்க உள்ளார். தற்போது இயக்குனர் ஷங்கர் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார்.

அவர் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதால் பாலிவுட்டில் டாப் நடிகையான தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தீபிகா ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் நடித்து இருந்தார். இவர் தற்போது இந்தியன்-2வில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில் கேத்ரினா கைஃப்பிடம் படத்தில் நடிப்பதற்கு அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
