கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மமான முறையில் இறந்ததால் பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டம் கலவரமாக மாறியது. நேற்று நடைப்பெற்ற வன்முறையில் மாணவர் அமைப்பினர் தனியார் பள்ளியின் பேருந்தை கொளுத்தி, பள்ளி ஆவணங்களை தீயிலிட்டனர். மேலும் கல்லை வீசி தாக்கியதால் காவலாளர்கள் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.

இதனால் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. போராட்டம் நடந்த அனுமதி தந்தது யார்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. மேலும் வன்முறை சம்மந்தமாக யார் உள்ளனர் என்பதை தனிக்குழு வைத்து கண்டுபிடிக்க வேண்டும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
