கள்ளக்குறிச்சியில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீமதி. இவர் மர்மமான முறையில் இறந்ததால் பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இன்று காலையில் நடைப்பெற்ற வன்முறையில் தனியார் பள்ளியின் பேருந்தை கொளுத்தினர். மேலும் கல்லை வீசி தாக்கியதால் காவலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

மேலும் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மரணம் தொடரபாக விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் குறித்து நடைபெறும் காவல்துறை விசாரணை முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
