கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த வன்முறைக்கு காரணம் தமிழக அரசின் மெத்தனமே என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியின் மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மமான முறையில் இறந்ததால் பெற்றோர் மற்றும் மாணவர் அமைப்பினர் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டம் கலவரமாக மாறியது. நேற்று நடைப்பெற்ற கலவரத்தில் மாணவர் அமைப்பினர் பள்ளியின் பேருந்தை கொளுத்தினர், பள்ளி ஆவணங்களை தீயிலிட்டனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது. மேலும் வன்முறை சம்மந்தமாக யார் உள்ளனர் என்பதை தனிக்குழு வைத்து கண்டு பிடிக்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இன்று நடை பெற்ற குடியரசு தேர்தலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடைப்பெற்ற கலவரத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் உளவுத்துறை செயலிழந்து இருப்பதாக கூறிய அவர் அரசு நினைத்திருந்தால் வழக்கை முன் கூட்டியே நடந்திருக்கலாம், இதனால் வன்முறையை தவிர்த்துருக்கலாம் என கூறியுள்ளார்.
