விஜய் டிவியில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக் பாஸ். இது வரை மொத்தமாக 5 சீசன்கள் நடைபெற்று உள்ளது. இதில் பங்கேற்கும் பிரபலங்கள் தனி வீட்டில் 100 நாட்கள் எப்படி இருக்கின்றனர்? எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? என்பதை வைத்து இறுதியில் யார் சரியாக நடந்து கொண்டாரோ அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்த ஷோ முதலில் வட இந்தியாவில்தான் ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குவார். தமிழில் உலக நாயகன் கமலஹாசன் கடந்த 5 சீசன்களாக தொகுத்து வழங்குகிறார். இதில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்? என்று கடந்த நாட்களாக பல தகவல்கள் வெளியானது. தற்போது இதன் அதிகாரபூர்வ ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோவில் நடிகர் கமலஹாசன் வேட்டைக்கு ரெடியா? என்று வந்துள்ளார். இதன் மூலம் 6வது சீசனிலும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார் என்பது உறுதியானது. நடுவில் சில நாட்களாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ 👇