அசுர வேகத்தில் மோதிய ஆம்புலன்ஸ்🚑 – நெஞ்சை பதைபதைக்கும் காட்சி!

கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கி உள்ளது. கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் மோதும் காட்சி நெஞ்சை பதற வைத்து உள்ளது. அசுர வேகத்தில் வந்த ஆம்புலன்ஸ் அங்கு தேங்கியுள்ள மழை நீரில் வழுக்கி விட்டு கட்டுபாட்டை இழந்தது. மேலும் அங்கு நின்றிருந்த ஊழியர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்புலன்சில் உள்ள நோயாளி, சுங்கச்சாவடி ஊழியர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

ambulance-accident

மேலும் சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வியில் இது பதிவாகி உள்ளது. பதைபதைக்கும் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வீடியோ👇

Youtube Video Code Embed Credits: DNAIndiaNews

Spread the Info

Leave a Comment