ரஜினிகாந்த் – கார்த்தி சுப்புராஜ்😎 கூட்டணி மீண்டுமா? – தலைவர்-170 அப்டேட்!

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் கமிட் ஆகி உள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்தின் 169வது படத்தை பல இயக்குனர்களை பரிசீலிப்பதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியானது. இறுதியாக நெல்சன் தான் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது உறுதி ஆனது. இதன் அதிகாரபூர்வ தகவலை சன் பிச்சர்ஸ் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.

rajinikanth
Rajinikanth

ஏற்கனவே நெல்சன் இயக்கி நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ‘பீஸ்ட்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிக படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் 170வது படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த கார்த்திக் சுப்புராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.

rajinikanth-petta
Rajinikanth Petta

அவர் கூறியதாவது நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் பேசும் போது பாசிட்டிவ் வைப் இருக்கும் என கூறிய அவர் ‘பேட்ட’ திரைப்படத்தின் கதையை ஏற்கனவே நான் தலைவரிடம் சொன்னேன் என்றார். மேலும் நான் வேறு ஒரு கதை எழுதி எழுதிக் கொண்டு இருக்கிறேன். தலைவர் ஓகே சொன்னால் அடுத்த படம் எடுப்பேன் என கூறியுள்ளார். மேலும் ஜிகர்தண்டா – 2வில் நடிப்பாரா? என கேட்டபோது ரஜினி நடிக்கவில்லை என தெரிவித்தார்.

karthik-subbaraj
Karthik Subbaraj
Spread the Info

Leave a Comment