நடிகர் விஷாலின் அடுத்தபடமான ‘லத்தி’ திரைப்படம் வினோத் குமார் இயக்கத்தில் வரவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் விஷால் , சுனைனா நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷால், சுனைனா, ரமணா, எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இப்படத்தின் டீஸர் மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழ்ப் படத்தின் டீசரை உதயநிதி வெளியிட்டார். தெலுங்கு டீசரை எஸ்.ஜே.சூர்யா மற்றும் இந்தி டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இப்படத்தைக் குறித்து பேசினார். அவர் கூறியதாவது “விஷாலும் நானும் ஒரே ஸ்கூல் மற்றும் காலேஜில் படிச்சோம். விஷால் இதற்கு முன்னாடியே போலீஸ் ரோலில் நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அஸ்ஸிஸ்டாண்ட் கமிஸ்ஸினர் என நடித்து உள்ளார், இப்பொது ப்ரோமோஷன் ஆகி கான்ஸ்டாப்பில்லாக நடித்து உள்ளார். நானும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடித்து இருந்தேன். ஆனால் அந்த படத்தில் பாட்டு, சண்டைக்காட்சிகள் இல்லாமல் நடித்தேன். ஆனால் விஷால் அப்படி இல்லை நேர் எதிரானவர். நிறைய சிரமப்பட்டு சண்டைக் காட்சிகளில் நடித்து உள்ளார். படம் வெற்றி பேர் என் வாழ்த்துக்கள். மேலும் தயவு செய்து நடிகர் சங்க கட்டிடத்தை காட்டுங்கள், அதை காரணம் சொல்லி கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்.” என கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷால் இப்படத்தின் டீசரை உதயநிதி வெளியிட வேண்டும் என கூறினேன், அது இப்போது நடந்து உள்ளது. மேலும் நடிகர் சங்க கட்டிடத்தி உடனே கட்ட வேண்டும் அதில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என கூறினார். இதோ லத்தி படத்தின் டீஸர்👇
YouTube Video Embed Code Credits: U1 Records