சரவணா அருள் நடிக்கும் திரைப்படம் ‘தி லெஜெண்ட்’ நாளை மறுநாள் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. திரையுலகில் முதல் முறையாக நடிக்க இருக்கும் இவர் படத்தை இயக்குனர் ஜே-டி ஜெர்ரி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் பிரபு, விஜயகுமார், யோகி பாபு, நாசர் மற்றும் மறைந்த முன்னாள் நகைச்சுவை நடிகர் விவேக் என ஒரு சினிமா பட்டாளமே நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மே மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேப்பைப் பெற்றது. அதற்கு பிறகு வெளியான பாடல்களான மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடிவாசல் பாடலும் நல்ல ஹிட் ஆனது.

ஆக்ஸன், ரொமேன்ஸ், காமெடி மற்றும் செண்டிமெண்ட் என பக்கா கமார்சியல் படமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் நடைப்பெற்ற இதன் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் நடந்தது. பிரபல கதாநாயகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் ப்ரோமோஷனிற்கான வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. ஏ.பி. இன்டர்நேஷனல் வெளியிட உள்ள, இப்படமானது வரும் ஜூலை 28ஆம் நாள் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணாச்சி சரவணன் அருள் ட்விட்டரில் இணைந்தார்.

மேலும் துபாயில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை லெஜண்ட் அண்ணாச்சி சரவணன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். இணைந்த சில நாட்களிலேயே 135k ஃபாலோவர்சய் பெற்றுள்ளார். மேலும் இணைந்த சில நாட்களிலேயே இவ்வளவு ஃபாலோவர்சய் பெற்றுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.