நடிகர் யோகி பாபு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உருவான திரைப்படம் மண்டேலா. இயக்குனர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் முதல் முதலில் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. பிறகு ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உள்ள சிறந்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியம் ஆனவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. ஆனால் இப்படத்தில் யோகி பாபுவின் வித்யாசமான நடிப்பு மற்றும் தோற்றத்தைப் பல பாராட்டினார். நாட்டின் 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று 5 விருதுகளை குவித்து உள்ள நிலையில் மண்டேலா படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்து உள்ளது.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது இப்படத்தின் இயக்குனர் மாடோன் அஸ்வினுக்கு கிடைத்து உள்ளது. மேலும் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருதும் இவர் தட்டிச் சென்றுள்ளார். தமிழ்ப்படங்கள் தேசிய விருதுகள் பல குவித்து உள்ளதால் தமிழ் திரை உலகில் பெருமையாக பார்க்கப்படுகிறது . மேலும் பல முக்கிய பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.